ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களில் மிருகங்களுடைய கண்கள் வைத்து அனுப்பப்பட்ட பார்சல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது சுமார் 10 மாதங்களாக ரஷ்யா தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பிலும் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் மிருகங்களின் கண்கள் வைக்கப்பட்டிருக்கும் பார்சல் வந்திருக்கிறது.
அதன்படி மாட்டிரிட்டில் இருக்கும் உக்ரைன் தூதரகத்திற்கு அந்த பார்சல் நேற்று வந்திருக்கிறது. அதன்பிறகு, காவல்துறையினர் அந்த தூதரகத்தை சுற்றி வளைத்தார்கள். உக்ரைன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ஒலெக் நிகோலென்கோ தெரிவித்ததாவது ஒரு வித்தியாசமான திரவத்தில் ஊறவைக்கப்பட்ட பார்சல்கள் இத்தாலி, குரேஷியா, போலந்து, ஹங்கேரி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருக்கும் உக்ரைன் நாட்டு தூதரகங்களுக்கு சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தூதரகங்களிலும் துணை தூதரகங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார்.