Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டதை கொடுத்த C.M… மக்கள் நடக்கவே முடியல…! புலம்பிய மாஜி அமைச்சர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.

கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து விட்டு அனைத்து சாலைகளிலும் பொதுமக்கள் நடக்க முடியவில்லை. குண்டும் குழியுமாக மோசமான சாலைகள் கோவை மாவட்டத்தில் உள்ளது.

இதற்கு முன்னால் அம்மா ஆட்சி இருக்கும் பொழுது கோவை மாவட்டத்தில் அற்புதமான சாலைகள்.. இப்பொழுது உள்ள மோசமான சாலைகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். அதேபோல் அம்மா அரசு அறிவித்த, எடப்பாடி அரசு அறிவித்தத பாலங்கள் அனைத்தும் விரைவில் செய்து முடிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி பணியை வேகமாக முடிக்க வேண்டும். சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும். அதேபோல் மின் கட்டணம் உயர்வை குறைக்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |