Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் காலி பணியிடங்களுக்கு இன்று தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது.

தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வானது சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய ஏழு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

Categories

Tech |