Categories
மாநில செய்திகள்

ஆர்.சி.டி கருவியை மின் இணைப்புடன் பொருத்தினால் என்ன செய்யும்?…. இதோ முழு விவரம்…..!!!

தமிழகத்தில் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு டிரிப்பர் கருவி பொருத்தப்பட வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மழைக்காலங்கள் மற்றும் அதிக வெப்பம் நிலவும் காலங்களில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் பல விபத்துக்கள் நடக்கின்றன. தமிழகத்திலும் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால் இதனை தவிர்க்கும் விதமாக வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பண்ணைகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் மின் நுகர்வோர்கள் கட்டாயம் டிரிப்பர் கருவி பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர் சி டி கருவியை மின் இணைப்புடன் இணைக்கும் போது மின் ஒயர்களில் பழுது, சுவர்கள் மற்றும் மின்சாதனங்களில் மின் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின்சாரம் செல்வது துண்டிக்கப்படும். வீடுகளில் 15 மில்லி ஆம்பியர் அளவு மின் இழப்பு ஏற்பட்டால் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்த கருவி மின்சாரத்தை நிறுத்தி விடும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |