நல்ல நிதித் திட்டமிடல் என வரும்போது எஸ்ஐபி-ன் பெயர் முதலாவதாக வரும். ஏனென்றால் இவற்றில் ஒரு பெரிய தொகையை குறுகிய காலத்தில் நாம் சேமித்து விடலாம். எஸ்ஐபி வாயிலாக சில வருடங்களில் நல்ல தொகையை திரட்டி உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். இதன் வாயிலாக நாளுக்குநாள் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களின் இறுக்கத்தில் இருந்து விடுபடலாம்.
அத்துடன் குழந்தை வெளிநாட்டில் படித்தாலும் சரி (அ) நாட்டிற்குள் படித்தாலும் சரி விலை உயர்ந்த கட்டணங்கள் (அ) பிற செலவுகளின் பதற்றத்தில் இருந்து விடுபட எஸ்ஐபி வாயிலாக பெற்றோர் நிவாரணம் பெறலாம். மாதந்தோறும் ரூபாய். 500 எனும் சிறுத் தொகையினை முதலீடு செய்தும் எஸ்ஐபி-ஐ துவங்கலாம். எனினும் எந்த நேரத்தில் உங்களுக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பது உங்கள் நிதி இலக்குகளைப் பொறுத்தது ஆகும்.
எடுத்துக்காட்டாக நீங்கள் மாதந்தோறும் 1000 ரூபாய்க்கு எஸ்ஐபி செய்கிறீர்கள் எனில், ஆண்டு வருமானம் 12 சதவீதம் மற்றும் பணவீக்கத்தையும் கணக்கிட்டால், 20 வருடங்களில் உங்களிடம் ரூபாய்.4.6 லட்சம் இருக்கும். 20 வருடங்களாக மாதந்தோறும் 1000 ரூபாய் டெபாசிட் செய்தீர்கள் எனில், நீங்கள் மொத்தம் ரூ.2.4 லட்சம் டெபாசிட் செய்திருப்பீர்கள்.
20 வருடங்களுக்கு பின் இத்தொகை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக ரூ.4.6 லட்சமாக அதிகரிக்கும். அதன்படி ரூபாய்.2.2 லட்சம் கூடுதலாக கிடைக்கும். ஆண்டு பணவீக்கம் 6% இதில் சரிசெய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மாதந்தோறும் ரூ.5,000 டெபாசிட் செய்து இருந்தால், 20 வருடங்களுக்கு பின் மொத்தம் ரூபாய்.23.2 லட்சம் சேர்ந்து இருக்கும். இருப்பினும் நீங்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவு வெறும்ரூ.12 லட்சம் ரூபாயாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.