தமிழ் சினிமாவில் விஷால் நடித்த ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்திற்குப் பிறகு ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீசான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது துல்கர் சல்மானுடன் இணைந்து கிங் ஆப் கோத என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதன் பிறகு மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து கிறிஸ்டோபர் என்ற படத்திலும் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இந்த படத்தை பி. உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான் சிறுவயதில் இருந்தே மம்முட்டியின் மிகப்பெரிய ரசிகை என்று கூறியுள்ளார். தற்போது எனக்கு மம்முட்டியுடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும் நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார். மேலும் ஒரே நேரத்தில் தந்தை மகன் படங்களில் சேர்ந்து நடிப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது எனவும் சமீபத்திய பேட்டியில் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.