தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படமானது தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. கடந்த மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான லவ் டுடே திரைப்படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதோடு, பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது.
இந்நிலையில் லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அட்லீ பிரதீப் ரங்கநாதனை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் லவ் டுடே திரைப்படம் ஒரு ஜாலி கலந்த பயணம். மாஸ் ப்ரோ. கலக்கிட்டீங்க என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மிக்க நன்றி அட்லீ அண்ணா. என்னை ஊக்குவிக்கும் ஒரு நபரிடம் இருந்து பாராட்டுக்கள் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் லவ் டுடே திரைப்படம் தெலுங்கு சினிமாவிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
LOVE TODAY! Wat a fun rider loved it
congratulations to @AgsEntertainme6 Aghoram sir Sissy @archanakalpathi ❤️❤️❤️and team @pradeeponelife mass bro kalakittinga @realradikaa mummy ❤️❤️#sathyaraj sir ❤️ @thisisysr bro lovely work bro Cinematography was fantastic !! @DKP_DOP— atlee (@Atlee_dir) December 3, 2022