போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட விரிவாக்க பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமானது பயணிகளுக்கு சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகளை WhatsApp வாயிலாக பெறும் வசதியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த வசதியானது பயனர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் அணுகக்கூடியதாக மாறும் எனவும் டிக்கெட் எடுக்க செலவிடும் நேர விரையம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது வரை சென்னையில் தினசரி சுமார் 2 லட்சம் நபர்கள் வரை மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது .