Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணத்தில் கூட என்னை உருவ கேலி செஞ்சாங்க”…. நான் பெருசா எடுத்துக்கல….. நடிகை மஞ்சிமா மோகன் வேதனை….!!!!!

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தன்னை பலரும் உருவ கேலி  செய்ததாக ஏற்கனவே நடிகை மஞ்சிமா சமூக வலைதளத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, சமூக வலைதளங்களில் மட்டும் நான் உருவ கேலியை சந்திக்கவில்லை. என்னுடைய திருமணத்தின் போது பலர் என்னை வாழ்த்தினாலும் சிலர் என்னை உருவ கேலி செய்தார்கள். அதை நான் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. என்னுடைய உடல் எடையில் நான் சௌகரியமாக இருக்கிறேன். ஒருவேளை என்னுடைய தொழிலில் எடையை குறைக்க வேண்டிய அவசியம் வந்தால் மட்டும் நான் எடையை குறைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை மஞ்சிமா மோகன் உருவ கேலி பிரச்சனையால் வேதனையோடு பேட்டி அளித்துள்ளார்.

Categories

Tech |