அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அண்ணாமலை தவறாக பழி சுமத்த வேண்டாம் என சட்ட அமைச்சர் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அரசு இதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்றார்.
அரசாணை பிறப்பித்தால் உடனே தடை உத்தரவு வாங்கி விடுவார்களோ என்ற நோக்கத்தில் அரசாணை வெளியிடவில்லை என்றார். உண்மை நிலவரம் இதுதானே தவிர அண்ணாமலை பேசுவது தவறு என ரகுபதி கூறினார். இது போன்ற தகவலான கருத்துக்களை அவர் தெரிவிக்க வேண்டாம் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.