நார்த்தங்காவின் இலை உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள நார்த்தங்காய் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி யை அதிக அளவில் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பலரும் ஊருகாய் தயாரிப்பதற்காக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நார்த்தங்காவின் இலை, காய், என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
இது பெரும்பாலானோருக்கு தெரியாது. குறிப்பாக நார்த்தங்காய் மரத்தின் இலையை பொடியாக்கி நாம் சாப்பிடும் உணவில் நாள்தோறும் சேர்த்துவந்தால் எதிர்ப்பு சக்தி பல மடங்கு பெருகும். தற்போது பரவும் புதிய நோய்களிடமிருந்து நாம் தப்பிப்பதற்கு எதிர்ப்பு சக்தி அதிக அளவில் தேவைப்படுவதால் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இதனை வழங்கினால் மிக நல்லது.