Categories
தேசிய செய்திகள்

“சிறையில் படிக்க புத்தகம்”…. கணிக்க முடியாத செஸ்….. காதலியை 35 துண்டுகளாக வெட்டியவரின் கோரிக்கை…..!!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அப்தாப் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் போலீசாருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால், நார்கோ சோதனையும் நடத்தப்பட்டது. இந்த 2 சோதனைகளிலும் அப்தாபின் வாக்குமூலம் ஒத்துப்போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதாவது அப்தாப் ஷ்ரத்தாவை கொலை செய்ததையும், உடலை 35 துண்டுகளாக வெட்டியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் அப்தாப் சிறையில் இருக்கும் போது தனக்கு இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால் இலக்கியம் சம்பந்தமான புத்தகங்கள் வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். இதனால் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய ஆங்கில நாவல் ஒன்று அப்தாபுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறை அதிகாரி ஒருவர் அப்தாப் பற்றி கூறும்போது, அவர் சிறையில் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டதால் அவருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு செஸ் விளையாட்டிலும் மிகவும் கைதேர்ந்தவராக இருக்கிறார். அவர் செஸ் விளையாடும்போது அவருடைய அடுத்த கட்ட நகர்வுகள் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதைப் போன்று தான் கொலை வழக்கிலும் உரிய ஆதாரங்களை கைப்பற்றுவது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும் அப்தாபுக்கு சிறையில் பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |