Categories
தேசிய செய்திகள்

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி…!!!

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தார் மாவட்டத்தில் தாமோத் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 100 பேர் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரிமாறப்பட்ட உணவு நஞ்சாக மாறியதே இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |