Categories
அரசியல் நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானையைப் பிடிக்க 3 டாக்டர்கள், 50 நபர்கள்..!!!!

காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீடு புகுந்து ஒருவரை அடித்துக் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், காட்டு யானையை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதால் விரைவில் அந்த யானை பிடிபடும் என கூறினார்.

Categories

Tech |