Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உற்பத்தியை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்… அடுத்த திட்டம் என்ன…? வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தலைநகர் பீஜிங், ஷாங்காய் போன்ற பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பல இடங்களில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சீனாவில் இருந்து தன்னுடைய தயாரிப்பை மற்றொரு நாட்டிற்கு மாற்றுவது பற்றி ஆலோசனை செய்து வருகிறது.

ஏனென்றால் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் சீனாவில் தன்னுடைய உற்பத்தியை நிறுத்த விரும்புகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளால் ஐபோன் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. வருகிற 2025 -ஆம் வருடத்திற்குள் ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச், ஏர்போர்ட்ஸ் போன்ற மொத்த ஆப்பிள் தயாரிப்புகளில் 25 சதவீதத்தை சீனாவிற்கு வெளியே பிற ஆசிய நாடுகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியா மற்றும் வியட்நாமில் தன்னுடைய வணிகத்தை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை பரிசீலித்து  ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Categories

Tech |