“வாரிசு” திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்த “வாரிசு” திரைப்படம் பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியாகயுள்ளது.
இந்த இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாடலான “ரஞ்சிதமே” என்ற பாடல் யூடியூபில் வெளியாகி 78 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இதேபோன்று இரண்டாவது பாடலான “தீ தளபதி” அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.