Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்னோடு வாழ வா….. கணவருக்கு கத்திக்குத்து….. மனைவி உட்பட 3 பேர் கைது…..!!

கடலூர் அருகே கணவனை கத்தியால் குத்திய மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை அடுத்த சின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் கமல்மதி. இவருக்கும்  இவரது மனைவியான மயில் அழகி என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்,

நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராரில் மயில் அழகி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட அங்கு சென்று தனது மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கமல் மதி தகராறு செய்துள்ளார். இதில்,

ஆத்திரமடைந்த மயில் அழகி  அவரது உறவினர்களான உதயகுமார், சாந்தி ஆகியோருடன் சேர்ந்து அவரது கணவரை கத்தியால் குத்தி பின் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து தாக்கப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின் அவரது மனைவி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |