Categories
மாநில செய்திகள்

நீ படிக்க வை!… நான் வாழ வைக்கிறேன்!… அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளை பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து யாரும் நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கூறினார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் என்னிடம், மாணவர்களை நன்றாக படிக்க வைத்து விடு. அவர்களை நான் வாழவைத்து விடுகிறேன் என்று அடிக்கடி சொல்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Categories

Tech |