அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி மோதி கொள்கிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அம்மா ஜெயலலிதா சொன்னது போன்று தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதிமுக நூற்றாண்டு காலத்திற்கும் ஆட்சியில் இருக்கும். எங்களுடைய தலைவர் ஓபிஎஸ் சொன்னது போன்று ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரிக்கும் போது பதவியில் இருப்பவர்கள் மட்டும் எதிர்க்கிறார்கள்.
நாங்கள் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தனிக்கட்சி வைத்துள்ள சண்முகம், டிடிவி தினகரன் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று தான் விரும்புகிறோம். இவர்கள் ஒருவேளை ஒற்றுமைக்கு ஒத்துழைக்க மறுத்தால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது தான் உண்மை. அதன் பிறகு திமுக எங்களை எந்த வகையிலும் ஆட்கொள்ளவில்லை. அதற்கு நாங்கள் இடமும் கொடுக்கவில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். மேலும் முன்னால் அமைச்சர் வைத்திலிங்கம் சொன்னது தற்போது அதிமுக கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.