Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னை கலாய்க்க தான் போறாங்க”…. இருந்தாலும் தமிழக ஆளுநர் பத்தி சொல்றேன்…. தமிழிசை சௌந்தர்ராஜன்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, சட்டசபையில் மசோதாக்கள் இயற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் உடனே கையெழுத்து போட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அவருக்கு சந்தேகம் இருப்பின் அது தீர்ந்த பிறகு கையெழுத்து போடுவார் என்று கூறினார். அதன் பிறகு செய்தியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்களே அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழிசை ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவது சரியானது கிடையாது. ஏனெனில் ஆளுநர் என்பவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார். இது ஜனநாயக நாடு. இதற்கென்று ஒரு வழிமுறை இருப்பதால் அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் என்னுடைய இந்த கருத்துக்கு தற்போது விமர்சனங்கள் வரும் என்றும் தமிழிசை கூறினார்.

Categories

Tech |