அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கிருந்து இங்குமாக, இங்கிருந்து அங்குமாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ் திடீரென அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் குரலாக இருந்து வந்த கோவை செல்வராஜ் கட்சியிலிருந்து விலகியது ஓபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரிய அடி என்று தான் சொல்லப்படுகிறது.
அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருவதால் அவர்கள் இருவர் அணியிலும் எனக்கு இருப்பதற்கு விருப்பமில்லை என கோவை செல்வராஜ் கூறியுள்ளார். அதோடு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரண அறிக்கை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தனக்கு அதிருப்தியை ஏற்படுத்து வதாகவும் கோவை செல்வராஜ் கூறியுள்ளார். இந்நிலையில் கோவை செல்வராஜ் அதிமுகவிலிருந்து விலகிய நிலையில், வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவில் இணையலாம் அல்லது அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
இவர் பதவி விலகுவதற்கு இது மட்டும்தான் காரணமா என்று பார்த்தால், வேறு சில காரணங்களும் கட்சியில் கூறப்படுகிறது. அதாவது இபிஎஸ் தரப்பில் இருக்கும் 22 எம்எல்ஏல்கள் மற்றும் கணிசமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தாலே எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைப்பதோடு அதிமுகவும் வசம் வந்துவிடும். ஆனால் அவர்கள் கேட்கும் விவகாரத்துக்கு ஓபிஎஸ் ஒத்துக் கொள்ளாததால் தான் ஓபிஎஸ் பக்கம் வருவதற்கு யோசிப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே கட்சியிலிருந்து விலகிய நிலையில், தற்போது கோவை செல்வராஜ் போன்ற முக்கியமான நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவது அதிமுகவுக்கு பலவீனத்தை தான் ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இதற்கு பிறகும் ஓபிஎஸ் துணிந்து அதிரடி நடவடிக்கை எடுக்க விட்டால் கண்டிப்பாக கட்சியை காப்பாற்ற முடியாது தொண்டர்கள் அனைவரும் கைவிட்டு போய் விடுவார்கள் என்பதே பலரது கருத்தாகவும் இருக்கிறது.