இந்தியாவில் சிறைகளை மாற்றி அமைக்கக் கோரி ஸ்மிதா சக்ரவர்த்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வருகிறார். ஜெய்பூர் சாங்கானேர் பகுதியிலுள்ள திறந்தவெளி சிறை பற்றி அவர் சென்ற 2017ல் அளித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அதேபோன்ற சிறையை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
திறந்தவெளி சிறைகளை அமைப்பது பற்றிய கோரிக்கையை வலியுறுத்தி ப்ரிஸன் எய்ட் பிளஸ் ஆக்ஷன் ரிசர்ச் எனும் அமைப்பை ஸ்மிதா சக்ரவர்த்தி நடத்தி வருகிறார்.
இதுகுறித்து ஸ்மிதா சக்ரவர்த்தி கூறியதாவது “திறந்தவெளி சிறைகளை விட வழக்கமான சிறைகளிலிருந்து தப்பித்துச் செல்லும் கைதிகளின் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளதை சிறை நிர்வாகங்கள் கவனித்துள்ளது. மனிதாபிமானத்துடன் நடத்தினால் உயரமான மதில்களோ, இரும்புக்கம்பி வேலிகளோ இல்லாத போதிலும் சிறைக்கைதிகள் தப்பி செல்ல மாட்டார்கள். இதனிடையில் குறைந்தபட்ச கட்டுப்பாடு என்பது ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது. ஆகவே திறந்தவெளி சிறைகள் அமைப்பது பற்றி இந்தியா தாராளமனதுடன் சிந்திக்கவேண்டும்” என்று அவர் கூறினார்.