தொலைத்தொடா்பு துறையில் மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்துக்கு தகுதிபெற்ற 40 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடந்தது. அப்போது மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, அண்டை நாடுகளிலிருந்து இருந்து தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதை தீவிரமாக கண்காணிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.
இதற்குரிய வழிமுறை விரைவில் உருவாக்கப்படும் என மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். அத்துடன் உள்நாட்டில் தொலைத்தொடா்புத் துறை உற்பத்தியை ஊக்குவிக்க 4 பிரத்யேக பணி குழுக்கள் அமைக்கப்படும் எனவும் அவா் கூறினாா்..