Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ காந்தியாவே இரு… எதுக்கு பிக்பாஸ் வந்த…” விக்ரமனை போட்டு தாக்கிய வனிதா..!!!!

விக்ரமனை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் வனிதா.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தினமும் தவறுகள் செய்து கமலிடம் திட்டு வாங்கி வருகின்றார் அசீம். ஒவ்வொரு வாரமும் மாத்திக்கிறேன் என சொல்லி மீண்டும் தவறுகள் செய்து திட்டு வாங்கிக் கொண்டே இருக்கின்றார் அசீம். அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் வேணும்னே செய்கின்றார் என்பது தெரிகிறது.

அவர் தன்னை தனியாக காண்பிப்பதற்காக அப்படி செய்கின்றார் என பலரும் விமர்சித்து வருகின்றார்கள். அதை அவருமே ஒப்புக்கொண்டிருக்கின்றார். இந்நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளர் விக்ரமன் தான் அசீமுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார். அசீம் என்ன செய்தாலும் அவரிடம் விக்ரமன் தான் சண்டைக்கு செல்கின்றார். இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான வனிதா தற்போது விக்ரமனை தாக்கி பேசியுள்ளார்.

“விக்ரமன் காந்தியாகவே இருக்கட்டும். பிக் பாக்ஸ் எதுக்கு வந்தார். லைம்தேடி தானே நீயும் வந்த. அவன் நடிகன். ஒரு பொலிட்டீசியனாக நல்லது பண்ண நினைத்தால் வெளியில் இருந்து பண்ணு. உனக்கு எதுக்கு பிக் பாக்ஸ். ஒரு நடிகருக்கு பிக் பாஸ் அவசியம். நீ எதுக்கு வரிசையில் நின்னு ஆடிஷன் பண்ணி பிக் பாஸ் வந்திருக்க. அசீம் பண்றது தப்புன்னு எல்லாருக்கும் தெரியும். விக்ரமன் இதற்கு எல்லா கேமரா முன்னாடியும் போய்சொன்னதையே சொல்லிக்கிட்டே இருக்காரு” என அவரை தாக்கி பேசி இருக்கின்றார் வனிதா.

Categories

Tech |