Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் நடிக்கும் “துணிவு”…. அதை பற்றி மட்டும் கேட்காதீங்க?…. டிரைக்டர் வினோத் ஓபன் டாக்….!!!!!

டிரைக்டர் சிவாவுக்கு அடுத்தபடியாக, அஜித் நடிக்கும் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனராகவே எச்.வினோத் மாறிவிட்டார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை அடுத்து தற்போது 3வது முறையாக அஜித்தை வைத்து “துணிவு” திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த 3 திரைப்படங்களையும் தயாரிப்பாளர் போனிகபூரே தயாரித்து உள்ளார்.

“துணிவு” படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றிய சில தகவல்களை டிரைக்டர் வினோத் பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா, இரட்டை வேடங்களில் நடித்துள்ளாரா என்று வினோத்திடம் கேட்கப்பட்டது.

அதற்கு வினோத், “நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு நான் ஆமாம் என்று பதில் கூறினால், உடனடியாக இது இன்னொரு மங்காத்தாவா என அவர்களாகவே வேறுவித கற்பனைக்கு தாவிவிடுவர். இதனால் அஜித்தின் கதாபாத்திரம் என்ன என்பது படம் வெளியாகும் வரையிலும் மர்மமாகவே இருக்க விட்டு விடுங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |