Categories
சினிமா தமிழ் சினிமா

“எத்தனை எதிர்ப்புகள், எத்தனை நிராகரிப்புகள்”…. திரும்பிப் பாத்தா 45 படங்கள்…. 10 வருட நிறைவால் நெகிழ்ச்சியில் பிரபல நடிகை…..!!!!!

தமிழில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது படங்களில் வில்லி கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சினிமாவுக்குள் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவுக்குள் வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 45 படங்களில் நடித்துள்ளேன். நான் படங்களில் வில்லியாக நடிக்கிறேன்.

இது அவ்வளவு சுலபம் கிடையாது என்றாலும், என்னுடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.  என்னால் வில்லி கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை தற்போது நிரூபித்து விட்டேன். என்னுடைய 10 வருட சினிமா வாழ்க்கை சுலபமாக இல்லை. எத்தனையோ எதிர்ப்புகள் மற்றும் நிராகரிப்புகளை சந்தித்தேன். இருப்பினும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். மேலும் இடைவெளி இல்லாமல் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதோடு 45 படங்களில் நடித்து விட்டேனா என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |