தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 , பிளஸ் 2 பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. மார்ச்.2.ல் தொடங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வுவை 8.16 லட்சம் மாணவர்களும் , மார்ச்.4.ல் தொடங்கிய பிளஸ்1 பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், மார்ச்27.ல் தொடங்க உள்ள 10 வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.
10ஆம் வகுப்புக்கு மே.4ஆம் தேதியும் , 11ஆம் வகுப்புக்கு மே.14ஆம் தேதியும் , 12ஆம் வகுப்புக்கு ஏப்.24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 31ம் தேதி முதல் தொடங்குகிறது என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. அதே போல பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.