ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள்.
அதிக உழைப்பால் பணவரவு சீராக இருக்கும். விஷப் பிராணிகளிடம் கவனமுடன் இருங்கள். தொழில் வியாபாரம் விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உங்களிடம் வசீகரமான தோற்றம் வெளிப்படும். போட்டிகள் விலகிச் செல்லும். எதிரிகளும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை கொள்ளக்கூடும். இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும், ஆனால் பேச்சில் தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். மேலதிகாரிகளின் கனிவான பார்வை உங்கள்மீது விழும். உங்களுடைய உழைப்பிற்கு நல்லபலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவி இருவருக்குமிடையே அன்பு அதிகரிக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். மேற்கல்வி காணும் முயற்சியில் வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் மிகவும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.