Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் – உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியது!

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வைரசால் உலகளவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலிடத்தில் சீனாவும், அதற்கடுத்த இடத்தில் இத்தாலியும் உள்ளது. சீனாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையல் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று சீனாவில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் மட்டும் இதுவரை 9,172 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் 237 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |