நடிகர் விஜய் திரைத்துறையில் நுழைந்து 30 ஆண்டுகள் நேற்று நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அன்னதானம், சிறப்பு பூஜைகள் என செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் நாளைய முதல்வர் விஜய், நாளைய அமைச்சர் புஸ்லி ஆனந்த் போஸ்டர் ஒட்டி வைத்துள்ளனர். தமிழகத்தின் அடுத்த முதல்வரே என்றும், இன்று தளபதி நாளை தமிழகத்தின் தளபதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அவருடைய ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வந்தனர். ரசிகர்கள் விஜயை பாராட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாகவே தேனியில் ஒட்டப்படும் போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்த போஸ்டர்களும் சர்ச்சை கிளப்பி உள்ளது.