நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே துறையில் அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அனைத்தையும் கவனிக்க வேண்டும். ரயில்வே துறை தனது பயணிகளுக்காக மிகக் குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்குகின்றது. ரயில்வே இணையதளம் அல்லது செயலி, ஆன்லைன் பிளாட்பார்ம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீடு என்ற விருப்பம் ஒன்று இருக்கும்.
இதற்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக செலவழிக்க வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இந்த காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லீப்பர் அல்லது ஏதேனும் ஒரு பெட்டிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அந்த நேரத்தில் காப்பீட்டை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பயணத்தின் போது ஒரு பயணி உயிரிழந்தால் காப்பீட்டு நிறுவனம் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றது. ஒரு பையனின் முற்றிலும் ஊனமுற்றால் அவருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
பகுதி அளவு ஊனமுற்றால் காப்பீட்டு நிறுவனம் 7.50 லட்சம் ரூபாய் வழங்கும். ரயில் விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தால் அவருக்கு இரண்டு லட்சமும் காண காயம் ஏற்பட்டால் பத்தாயிரம் ரூபாயும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எனவே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் விபத்து காப்பீட்டை அதில் நீங்கள் பதிவு செய்யலாம் அல்லது நேரில் சென்று டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு செய்தால் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் காப்பீட்டு விருப்பத்தை தேர்வு செய்து இந்த காப்பீட்டை நீங்கள் பெற முடியும்.