ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்லும் நிலையில், இரவே மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி இன்று ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பதால் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தி விட்டு டெல்லி கிளம்பி செல்கிறார். அதன்பிறகு ஜி20 மாநாடு நடைபெறும் போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அருகருகே அமர்வார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜி20 மாநாடு முடிவடைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது.