Categories
உலக செய்திகள்

மூத்த உறுப்பினர்களே….!! என் கேள்விக்கு பதிலளியுங்கள்…. கடும் கோபத்தில் மன்னர் சார்லஸ்…. நடந்தது என்ன….?

பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி வெளியிடவுள்ள புத்தகத்தில் கமிலா குறித்து தவறான தகவல் குறிப்பிட்டுருந்தால் மன்னர் சார்லஸ் தகுந்த நடவடிக்கை எடுப்பார்.

பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தனது 416 பக்க புத்தகத்தை வருகிற 10-ஆம் தேதி வெளியிடவுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள கேள்விக்கு ராஜ  குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று இளவரசர் ஹரி கூறியுள்ளார். மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி மீதான பாசம் காரணமாக ஒரு அளவிற்கு அனைத்தையும் பொறுத்துக் கொள்வார் என்று சிலர் நம்புகின்றனர். அதே சமயத்தில் கமிலா தொடர்பில் ஹரி தனது புத்தகத்தில் வரைமுறையில்லாமல் எழுதி இருந்தால் அதுவே மன்னர் சார்லஸ்க்கு சிக்கலாக மாறிவிடும். இதுவே இளவரசர் ஹரியை ராஜ குடும்பத்திலிருந்து மொத்தமாக வெளியேற்றுவதற்கு காரணமாக இருக்கும்  என்றும் சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து மன்னன் சார்லஸ் கூறியதாவது, ” கமிலா பற்றி இனிமேலும் எவரும் பேசுவதை நான் விரும்பவில்லை. இதற்கு ஒரு வரைமுறை கண்டிப்பாக தேவை என்று நான் கருதுகிறேன். எனது மகன் மீது அளவு கடந்த பாசம் இருந்ததால் கமிலா மீதான கடுமையான பேச்சை நான் பொறுத்துக் கொண்டேன். இளவரசர் ஹரி தனது தாயாரை நான் விவாகரத்து செய்ய கமிலா தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இளவரசி டயானா அப்பழுக்கற்ற ஆள் தெய்வம் என ஹரி கொண்டாடுவார் என்றால் அவருக்கு அவரே வைத்துக் கொள்ளும் உலை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் உங்கள் விருப்பம் போல வாழ முடிவு செய்து விட்டீர்கள் என்றால் ராஜ குடும்பத்து பட்டங்கள் அனைத்தையும் துறந்து விட்டு செல்லுங்கள் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போது ராணியார் இல்லாத நிலையில், மன்னர் சார்லஸ் மற்றும் பட்டத்து இளவரசர் வில்லியம் ஆகியாரின் முடிவே இறுதியாக இருக்கும். இதற்கு முன்னதாக ஆவணப்படம் குறித்து முதல் பார்வை வெளியான போதே இளவரசர் ஹரி மற்றும் இளவரசர் வில்லியம் இனி ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை என்று உறுதியாக தெரியும். மேலும் ராஜ குடும்பத்தை கருத்தில் கொண்டு கருத்து வேறுபாடுகளை இருவரும் ஒதுக்கி வைப்பார்கள் என்று நம்பிக்கை மொத்த உறுப்பினர்களுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |