Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை அழைப்பதற்காக சென்ற வங்கி மேலாளர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள விளாங்காடு பக்கம் நியூ ஸ்டோர் சிட்டி பகுதியில் விவேக் சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விவேக் மாதவரத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் மஞ்சம்பாக்கம் ரவுண்டானா அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விவேக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுபவித்தவர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விவேக் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுனரான சீனிவாசன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |