Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு…. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு சூப்பர் தகவல்….!!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிச..6  நாளை தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த கார்த்திகை திருவிழாவில் பெரும்பாலானோர் பங்கேற்பது வழக்கம். ஆகவே பக்தர்களுக்கு வசதியாக முன்பே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சிறப்பு ரயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை- வேலூர் இடையில் இயக்கப்பட்ட (ரயில் எண்06033/06033) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயில் டிசம்பர் 5ம் தேதி இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு இயக்கப்படும். மறு மார்க்கமாக திருவண்ணாமலை-சென்னை கடற்கரை சிறப்பு ரயில் டிசம்பர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை இயக்கப்படும். இந்த சிறப்புரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12:05 மணிக்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் காலை 09:05 மணிக்கு புறப்பட்டு மாலை 03:45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும். அதேபோன்று (ரயில் எண் 06115/06116) தாம்பரம் -திருவண்ணாமலை -தாம்பரம் இடையில் இயக்கப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 6,7 ஆகிய இரு நாட்களுக்கு இயக்கப்பட இருக்கிறது..

Categories

Tech |