Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரில் சென்ற பெண்… டிரைவரை கைது செய்த போலீசார்… நடந்தது என்ன…?

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகு கலை பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகின்றார். அந்தப் பெண் அழகு கலை பயிற்சிக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக வாடகை கார் முன்பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் கார் வீட்டுக்கு வந்தவுடன் அந்த காரில் ஏறி அந்த பெண் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கார் சிறிது தூரம் சென்றதும் டிரைவர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது  நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும், இதே போல் உடை அணிந்தால் உங்களுக்கு மேலும் அழகாக இருக்கும் எனவும்  ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

இதன்பின் அழகு கலை பயிற்சி நிறுவனம் வந்தவுடன் அந்த பெண் இறங்க வேண்டும் என டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த டிரைவர் கார் கதவை திறக்காமல் அவரிடம் செல்போன் எண் கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத அந்த பெண் தனது கணவரின் செல்போன் எண்னை கொடுத்துவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அந்த பெண் தன்னுடைய கணவரிடம் விவரத்தை கூறியுள்ளார். இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பின் போலீசார் சம்பந்தப்பட்ட கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அந்த கார் டிரைவர்  தாராபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார்(30) என்பதும், அவர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதும் உறுதியானது. இதனையடுத்து ரஞ்சித் குமார் மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். மேலும்  அவரது காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |