Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரசிலிருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா …!!

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் ஜோதிராத்திய சிந்தியா கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனது.

இந்த மாதத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்படும் என்று சிந்தியா எதிர்பார்த்த நிலையில் திக்விஜய் சிங்கிற்கு தான் மாநிலங்கவை பதவி கிடைக்கும் என்றும் சொல்லப்பட்ட நிலையில் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இத்தகைய சூழ்நிலையில் அவர்  காங்கிரஸ் கட்சியின் தலைமையின் தொடர்பில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள மறுக்கிறார்.

மேலும் தனக்கு ஆதரவுடன் இருக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமறைவக்கியுள்ள நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் வரை நடந்த பின் அமித்ஷா வையும் சந்தித்தார் ஜோதிராதித்ய சிந்தியா. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.

Categories

Tech |