Categories
உலக செய்திகள்

நேபாள நாடாளுமன்ற தேர்தல்… மீண்டும் பிரதமராவாரா ஷெர் பகதூர் தூபா…??

நேபாளத்தில் கடந்த 20-ஆம் தேதி  நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு வாக்குபதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 110 பேர் விகிதாச்சார தேர்தல்  மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் 2 வாரங்களுக்கும் மேலாக எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 163 தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இந்நிலையில் 85 இடங்களை கைப்பற்றி  நேபாள காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி   தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. எனவே  பிரதமர் ஷெர் பகதூர் தூபா மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்புள்ளதாக  கூறப்படுகிறது.

Categories

Tech |