வங்கக் கடலில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காலை 9.05 மணி அளவில் நிலநடுக்கமானது உணரப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக வங்காள விரிகுடாவின் தென் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
கடலில் நில நடுக்கம் உணரப்பட்ட அனைத்து பகுதிகளுமே இந்தியாவிற்கு மிக அருகே இருப்பவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக காணப்படுவதாக கூறப்படும் நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கரையோரம் இருக்கும் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.
எனினும் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக சுனாமி பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.