Categories
உலக செய்திகள்

வேலை, பணம் எதுவும் வேண்டாம்… சிங்கத்துடன் தில்லாக வாழ்ந்து வரும் இளைஞன்!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பணக்காரர் தனது வேலையை ராஜினாமா செய்து ஆப்பிரிக்காவில் சிங்கங்களுடன் வாழ்ந்து வரும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

டீன் ஸ்னெய்டர் (deanschneider) என்ற பணக்கார இளைஞர் ஒருவர்  பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். அதேநேரத்தில் அவருக்கும் சிங்கத்தின் மீது ஈர்ப்பு அதிகம். ஆப்பிரிக்க சிங்கங்கள் அழியும் நிலையில் இருந்து வருவதை அறிந்த அவர், தென்னாப்பிரிக்காவில் சுமார் 360 ஹெக்டேர் நிலத்தை வாங்கி சிங்கங்களை வளர்த்து வருகிறார். இதற்காகவே தனது அனைத்து வேலைகளையும் ராஜினாமா செய்த அவர், இப்போது சிங்கங்களுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி உற்சாகமாக பொழுதை கழித்து வருகிறார்.

Image result for #DeanSchneider #SouthAfrica

தனது பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தரும் பணத்தில் வாழ்வதே தனக்கு போதும் என்று கூறும் ஸ்னெய்டர், பூங்காவில் வளர்ந்து வரும் சிங்கங்கள் மற்றும் கழுதைப்புலிகளுடன் இனி தனது வாழ்க்கையை வாழ போவதாக அதிர வைத்துள்ளார். சிங்கத்தை கண்டு பயப்படாதவர்களே கிடையாது. ஆனால் சிங்கத்தோடு படுத்து உறங்கி வாழ்ந்து வரும் இவருக்கு தில்லு கொஞ்சம் அதிகம் தான். இவரை போல உலகில் சிலர் விலங்குகளுக்காக அர்ப்பணித்து வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

https://twitter.com/deanschneiderFp/status/1163821620370104320

Categories

Tech |