Categories
மாநில செய்திகள்

“காவலர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு”…. சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் என காலியாக இருந்த 3, 552 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.  இதற்கான தேர்வு கடந்த மாதம் 27- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 295 தேர்வு மையங்கள் மூலம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் எழுதினர்.

இந்த எழுத்து தேர்வுக்கான விடை குறிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நேற்று தங்களது இணையதளத்தில் வெளியிட்டது. இந்நிலையில் இந்த இணையதளத்திற்கு சென்று தேர்வர்கள் விடை குறிப்பை  பார்த்து வருகின்றனர்.  இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் வருகின்ற 10-ஆம்  தேதிக்குள் தமிழ்நாடு சீருடை பணியாளர் அலுவலகத்திற்கு தபால் மூலம் மட்டுமே தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |