சென்னை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மும்பையில் உள்ள ஒரு பகுதியில் 42 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் பெண்ணின் கைகள், மார்பு ஆகிய பகுதிகளை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியும், சிகரட்டை கொண்டு சூடும் போட்டுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு நடந்தவற்றை ஒரு வீடியோவாக எடுத்து போலீசாரிடம் புகார் அளித்தால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த பெண் நடந்தவற்றை தனது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்ட அவர்கள் அந்த பெண்ணிற்கு ஆதரவு கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.