நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ 3.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனாவால் 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடக்கம். பிராய்லர் கோழியால் கொரோனா பரவுவதாக வதந்தி ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் சிக்கன் வாங்குவதை தவிர்த்தனர். ஆனால் கொரோனா பிராய்லர் கோழியின் மூலம் பரவாது என்று தமிழக அரசு விளக்கமளித்து, இது போன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தெரிவித்தது.
இந்த நிலையில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கொரோனோ பீதியின் காரணமாக முட்டை விலை குறைந்து வந்த நிலையில் தேவை காரணமாக விலை உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை சரிந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.23 ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது.