Categories
தேசிய செய்திகள் பல்சுவை

LIC யின் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. என்னனு தெரிஞ்சுகிட்டு உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எல்.ஐ.சி புதிய சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 12 வயது குழந்தைகள் வரை இணையலாம். இந்த திட்டத்தின் முதிர்வு வயது 25.

இதன் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் ஆகும். அதிகபட்ச காப்பீட்டு தொகை உச்ச வரம்பு இல்லை. இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக மணி பேக் தவணை உள்ளது. 18, 20 மற்றும் 22 வயது நிறைவடைந்ததும் அடிப்படைக் காப்பீடுத் தொகையின் 20% மணி பேக்காக தரப்படும். முதிர்வுப் பலன்களாக மீதமுள்ள அடிப்படைக் காப்பீட்டுத் தொகையின் 46% மற்றும் போனஸ் வழங்கப்படும். இந்த திட்டம் குறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள எல்.ஐ.சி கிளையை தொடர்புகொள்ளலாம்.

Categories

Tech |