தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும் நிலையில் இந்த வருடத்திற்கான தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆன நாளை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் அனைவரும் வழிபடுவார்கள்.
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.