Categories
சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் 2 போட்டியாளர்கள் இவங்க தான்?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 55 நாட்களைக் கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் களை ஒப்பிடுகையில் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் போட்டியாளர்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டால் அதில் கவனம் செலுத்துவதில்லை என கமல் கடுமையாக விமர்சித்த நிலையில் இந்த வாரம் ஓரளவு போட்டி விறுவிறுப்பாக சென்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குயின்சி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் வருகின்ற வாரம் இரண்டு பேர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ளார். அடுத்ததாக விக்ரமன், அசீம், ஷிவின் மூவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இல்லை.

மீதமுள்ள போட்டியாளர்களான ஏடிகே, அமுதவாணன், ஜனனி, ராம், கதிரவன், மைனா நந்தினி, ரக்ஷிதா, ஆயிஷா இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் ரக்ஷிதா மற்றும் மைனா நந்தினி இருவரும் சேர்ந்து வெளியேறுவார்கள் என பலரும் கூறி வருகின்றனர். அதே சமயம் ஏடிகே மற்றும் ஜனனி இருவரும் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வாரம் இவர்களின் ஆட்டத்தை பொறுத்தே யார் வெளியேறுவார்கள் என முடிவு செய்யப்படும்.

Categories

Tech |