மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக சென்று ஜெ., நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது, சமாதி முன் நின்ற இபிஎஸ், “அடுத்த தேர்தலில் அதிமுகவை மகத்தான வெற்றி பெறுவதே தங்களின் இலக்கு, இதுவே தாங்கள் எடுக்கும் சபதம்” என கூறினார். இதேபோல், OPS தரப்பினர், “தமிழகத்தில் அதிமுகவை ஒரு வலுவான எஃகு கோட்டையாக உருவாக்குவோம்” என்று சபதம் ஏற்றனர்.