உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் முன்னேறியதை அந்நாட்டு அதிபர் மேக்ரோன் கொண்டாடியிருக்கிறார்.
பிரான்ஸ் அணியானது உலககோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிரான்ஸ் அணியின் ஒலிவியர் ஜிரூட் 44-ஆம் நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் கணக்கை தொடங்கிய பிறகு, விறுவிறுப்பாக மைதானத்தில் சுற்றி வந்த எம்பாப்வே 74 மற்றும் 90-ஆம் நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார்.
En quarts ! pic.twitter.com/8GS5TTFrep
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 4, 2022
அதன்மூலம், போலந்து அணியை 3-1 என்ற கணக்கில் வென்றது பிரான்ஸ். அதனைத்தொடர்ந்து அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பிரான்சின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில், பிரான்ஸ் அணியின் வீரர்கள் புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.