நீடித்த விவசாயத்துக்கான மண்வள மேலாண்மை பற்றிய தேசியக் கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் இதனை தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்குரிய தேசிய இயக்கம் என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த 1,584 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்து இருக்கிறது.
இந்தியாவின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயத்தை மீண்டுமாக செயல்படுத்த மத்திய அரசானது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆந்திரப்பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இயற்கை விவசாய முறையை செயல்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.