மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநில அரசியலில் நேற்று இரவிலிருந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
இது திட்டமிட்டடு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக தான் தெரிகிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடகாவுக்கு சென்று அங்கே ஒன்றாக தங்கி இருந்தார்கள். இவர்கள் அனைவரும் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை நேரடியாக ஆளுநருக்கு அனுப்பி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. போபாலில் இருந்து வரும் தகவல் என்னவென்றால் இவர்கள் ராஜினாமா கடிதத்தை மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகருக்கும் அனுப்பி இருக்கிறார்கள்.